தலைநகர் டெல்லியில் உள்ள புராதானமான நாடாளுமன்றம் அருகிலேயே அதிநவீன புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைநகரின் மைய பகுதியில் இதுபோன்ற பிரம்மாண்டமான கட்டிட வேலைகளை மேற்கொள்வதால் சுற்றுசூழல் பாதிக்கும் என்பதோடு, புராதான சின்னமாக உள்ள பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் மீதான விசாரணையில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசு புதிய நாடாளுமன்றம் கட்டிக்கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது. அதேசமயம் சுற்றுசூழலுக்கும், புராதான சின்னங்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் மாசுக்கட்டுப்பாட்டு துறையின் உரிய அனுமதியுடன் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.