அழக்கூடாது.. இன்னும் நிறைய சாதிக்கணும்! – வீராங்கனைக்கு பிரதமர் மோடி ஆறுதல்!

ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (11:27 IST)
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்ல முடியாததால் அழுத வீராங்கனைக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறியுள்ளார்.

22வது காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காமில் தொடங்கி நடந்து வருகிறது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டிகளில் இந்தியா சார்பாக பல்வேறு போட்டிகளில் பல வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போட்டிகளில் மல்யுத்த போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பூஜா கெலாட் கலந்து கொண்டார். அரையிறுதி போட்டி வரை முன்னேறிய பூஜா அதில் தோற்றதால் வெண்கல பதக்கம் மட்டுமே வெல்ல முடிந்தது. இதனால் உணர்ச்சிவசப்பட்ட பூஜா கெலாட், தான் தங்கம் வெல்ல முடியாததற்காக பத்திரிக்கையாளர் சந்திப்பில் மன்னிப்பு கேட்டு கண் கலங்கியது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் வீராங்கனை பூஜா கெலாட்டிற்கு ஆறுதல் தெரிவித்து பேசியுள்ள பிரதமர் மோடி “பூஜா நீங்கள் பதக்கம் வென்றது கொண்டாடப்பட வேண்டியது. மன்னிப்பு கேட்பது அவசியமற்றது. உங்கள் பயணம் பலரையும் ஊக்கப்படுத்தும். இன்னும் பல சாதனைகளை நீங்கள் நிச்சயம் படைப்பீர்கள்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்