பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இணையதளம் முடக்கம்

புதன், 28 செப்டம்பர் 2022 (12:50 IST)
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் தடை செய்யப்பட்ட நிலையில் அந்த அமைப்பின் இணையதளம் முடக்கப்பட்டதாக வெளி வந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிப்பதாகவும் வன்முறைக்கு துணை போவதாகவும் புகார்கள் கூறப்பட்டன, இந்த நிலையில் தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடந்தது என்பதும் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அந்த அமைப்பு ஐந்து ஆண்டுகள் தடை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் இணைய தளத்தையும் மத்திய அரசு முடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்