கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தொடர்புடைய இடங்களில் சோதனை செய்யப்பட்டது என்பதும் இதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், 106 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த நிலையில் இன்று மீண்டும் நாடு முழுவதும் இரண்டாவது முறையாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. உத்தரபிரதேசம் மத்திய பிரதேசம் கர்நாடகம் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தொடர்புடைய அலுவலகங்களில் போலீசார் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.