நாள்தோறும் விலை நிர்ணயம்: பெட்ரோல் டீலர்கள் ஸ்ரைக்!!

சனி, 8 ஜூலை 2017 (12:08 IST)
பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றியமைக்கும் முறை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைமுறைப்படுத்தப்பட்டது. 


 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வந்தன. பின்னர் தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் அமலுக்குவந்தது.
 
இந்நிலையில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வதால் மிகப்பெரிய இழப்பு ஏற்படுவதாக கூறி ஜூலை 12 ஆம் தேதி அகில இந்திய பெட்ரோல் பங்க் டீலர்கள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். 
 
அன்றைய தினம் பெட்ரோல், டீசல் வாங்குவதும் இல்லை. விற்பனை செய்யப்போவதும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்