குஜராத் மாநிலத்தில் பாடகி கீதா பென் ரபாரியின் பாடலுக்கு ரூ.,4.5 கோடி ரூபாய் நோட்டுகளை மக்கள் வீசியுள்ளனர்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பாடகி கீதா பென் ரபாரி. இவர் பாடல் பாடுவதற்கு எங்கு சென்றாலும் இவரது பாடலால் ஈர்க்கப்பட்ட மக்கள் அவருக்கு பணமழை அபிஷேகம் செய்வர்.
இந்த நிகழ்ச்சியின்போது, கீதா பென் ரபாரியின் மீது மக்கள் பணமழை பொழிந்தனர்.
இந்த வீடியோ சமூகவலைதளங்ளில் வைரலான நிலையில், இதன் மூலம் ரூ.4.50 கோடி நன்கொடை கிடைத்ததாக கீதா பென் கூறியுள்ளார்.
சமீபத்தில், அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கீதா பென் பாடும்போது, அவருக்கு டாலர் மழை பொழிந்தனர். இதில், அவருக்கு ரூ..2.5 கோடி நன்கொடை கிடைத்ததாகக் கூறப்படுகிறது.