1000 பேரை பணி நீக்கம் செய்த பேடிஎம்

செவ்வாய், 26 டிசம்பர் 2023 (20:42 IST)
சமீபகாலமாக முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்து வரும் நிலையில், பேடிஎம் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் இருந்து 1000 பேரை நீக்கம் செய்துள்ளது.

பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேசன், செலவினங்களை குறைக்கும் வகையில் ஆட்குறைப்பு பணி செய்து வருகிறது.

அதன்படி, விற்பனை, பொறியியல் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

நிறுவனத்தின் செலவினங்களை குறைக்கும் நோக்கிலும், பணிகளை எளிமைப்படுத்தும் வகையிலும்  இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்வதாக கூறப்படும் நிலையில், நிர்வாக ரீதியிலான பணிகளில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை புகுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்வதாக தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்