ரயில கடத்திட்டாங்க.. காப்பாத்துங்க..! – பயணியின் ட்வீட்டுக்கு ரயில்வே அளித்த பதில்!

திங்கள், 11 ஜூலை 2022 (13:17 IST)
நிஜாமுதீனிலிருந்து யஷ்வந்த்பூர் செல்லும் ரயிலை சிலர் கடத்தி விட்டதாக பயணி ஒருவர் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து போபால், குர்னூல், கோப்பால், வழியாக யஷ்வந்தபூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் YPR Sampark KRT (12650) நேற்று வழக்கம்போல நிஜாமுதீனில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது. ஆனால் வழக்கமான வழித்தடம் வழியாக செல்லாமல் வேறு ரயில் நிறுத்தங்கள் வழியாக சென்றுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த ரயில் பயணி ஒருவர் ட்விட்டரில் ஐஆர்சிடிசி மற்றும் செகந்திராபாத் ரயில்வே கோட்டத்தை டேக் செய்து குறிப்பிட்ட ரயிலை யாரோ கடத்தி செல்வதாகவும், உடனடியாக உதவுமாறும் பதிவிட்டுள்ளார்.

அதற்கு பதில் அளித்துள்ள செகந்திரபாத் ரயில்வே கோட்டம், காஸிபேட்டா – பால்ரசா இடையே ரயில் தடத்தில் பணிகள் நடைபெற்று வருவதால் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளதாகவும், யாரும் ரயிலை கடத்தவில்லை, அதுகுறித்த பீதியடைய வேண்டாம் என்றும் பதில் அளித்துள்ளனர். இந்த ட்வீட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்