திங்கள் வரை மக்களவை ஒத்திவைப்பு!

வெள்ளி, 30 ஜூலை 2021 (12:31 IST)
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

 
பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை தொடங்கி 8 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், இரு அவைகளிலும் பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வந்தன. 
 
இந்நிலையில் இன்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காப்பீட்டு திருத்த மசோதாவை தாக்கல் செய்த நிலையில் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2:30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்