இந்நிலையில் செல்போன் தகவல் திருட்டு விவகாரம் உள்ளிட்டவற்றை குறித்து அமளி எழுப்பிய எதிர்கட்சிகள் பிரதமர் மோடியை பேச விடாமல் குறுக்கீடு செய்ததால் பரபரப்பு எழுந்துள்ளது. இதனால் மக்களவை 2 மணி வரைக்கும், மாநிலங்களவை 12.25 வரைக்கும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர் மற்றும் பெண்களை அமைச்சராக்கியது பிடிக்காமல் எதிர்கட்சிகள் அமளி செய்வதாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.