ஆனால் இதுதொடர்பாக அந்த டெலிவரி பாயிடம் போலீஸார் விசாரித்தபோது அதிர்ச்சிக்குரிய வேறு சில விஷயங்கள் தெரிய வந்தன. புகார் அளித்த பெண் ஆர்டர் செய்த உணவுக்கு பணம் தராமல் தகாத வார்த்தையால் திட்டியதாகவும், அவர் அடிக்க வந்தபோது டெலிவரி பாய் தடுத்தபோது பெண்ணின் கையில் இருந்த மோதிரம் மூக்கில் சிராய்த்து அந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஸொமாட்டோ டெலிவரி நபருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகை பரினீதி சோப்ரா “பெங்களூருவில் சொமோட்டோ ஊழியர் மீது இளம்பெண் குற்றம்சாட்டிய விவகாரத்தில் உண்மையை கண்டறிய வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட நபர் அப்பாவி எனில் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.