சர்ஜிகல் ஸ்டிரைக் உண்மைதான்: சரணடைந்த பாகிஸ்தான் அதிகாரிகள்

வியாழன், 6 அக்டோபர் 2016 (14:51 IST)
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய ராணுவம் கடந்த 28–ந்தேதி ஊடுருவி பயங்கரவாதிகள் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. 

 
இத்தாக்குதலில் பயங்கரவாதிகள் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களது 7 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் ராணுவம் அறிவித்தது.‘சர்ஜிகல்’ தாக்குதல் என்று இதற்கு இந்திய ராணுவம் பெயர் சூட்டியது. 
 
ஆனால் இப்படியொரு தாக்குதல் நடத்தப்படவில்லை என்று பாகிஸ்தான் மறுத்து வருகிறது. காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட்சிகள் இது தொடர்பான ஆதாரங்களை வெளியிடவேண்டும் என்று மத்திய அரசை வலியுருத்தி வருகின்றன.
 
இதற்கிடையே, பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக இந்த தாக்குதல் நடைபெறவில்லை என்று கூறினாலும் அந்நாட்டில் உள்ள சில அதிகாரிகள் சர்ஜிகல் ஸ்டிரைக் நடைபெற்றதை ஒப்புக்கொண்டது தெரியவந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்