அவர் மேலும் கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூர் என்ற இராணுவ நடவடிக்கையில் இந்திய ரஃபேல் விமானங்கள் பங்கேற்றது உண்மைதான். ஆனால், அந்த நடவடிக்கையிலிருந்தும் பிறகு அனைத்துப் போர் விமானங்களும் பாதுகாப்பாக தங்களது படைத்தளங்களுக்கு திரும்பியுள்ளன. ஒரு விமானமும் சுட்டு வீழ்த்தப்படவில்லை.
இந்தியப் படைகளின் நம்பிக்கையைக் குலைப்பதற்காகவே பாகிஸ்தான், சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகிறது. மேலும், உண்மை ஆதாரங்கள் இல்லாமலே, சமூக ஊடகங்களில் பிரபலமுள்ள சிலரின் பதிவுகளை ஆதாரமாக காட்டி, பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பேட்டி அளித்தது ஆச்சரியமளிக்கிறது.
ஒரு விமானம் விழுந்தால் அதன் சான்றுகளாக இடிபாடுகள், ராடார் தரவுகள், பைலட் தகவல்கள் போன்றவை வழங்கப்பட வேண்டும். ஆனால், இங்கே அவை எதுவும் இல்லை. செயற்கை நுண்ணறிவில் உருவாக்கப்பட்ட போலி படங்களை வைத்து திரித்த தகவல்களை பாகிஸ்தான் பரப்பி வருகிறது.