ஜேசுதாசுக்காக திறக்கப்பட்ட பத்மநாபசுவாமி கோவில்

செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (04:55 IST)
பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸ் பிறப்பால் கிறிஸ்துவராக இருந்தாலும் ஐயப்பனின் பாடல்கள் உள்பட பல இந்து கடவுள்களின் பாடல்களை மனமுருகி பாடியுள்ளார். அதுமட்டுமின்றி சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்கும், கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கும் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.



 
 
இந்த நிலையில் கேரளாவில் உள்ள பிரசத்தி பெற்ற கோவிலான திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் தரிசனம் செய்ய விரும்பி அதற்காக சமீபத்தில் விண்ணப்பித்திருந்தார். அவருடைய விண்ணப்பத்தை பரிசீலனை செய்த கோவில் நிர்வாகம், அவருக்கு தரிசனம் வழங்க அனுமதி கொடுத்துள்ளது. முன்னதாக அவருக்கு மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கடம்புழா தேவி அம்மன் ஆலயத்திற்கு சென்ற போதும் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
இது குறித்து கருத்து தெரிவித்திருந்த பத்மநாப சுவாமி கோயிலின் நிர்வாக அதிகாரி வி ரதீசன், “இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் யார் வேண்டுமானாலும் பத்மநாப சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய வரலாம். இந்து மதத்தின் மீது யேசுதாஸ் கொண்டுள்ள நம்பிக்கை பற்றி நம் அனைவருக்கும் நன்றாக தெரியும். எனவே, அவர் இங்கு தரிசனம் செய்ய வருவதில் எந்த பிரச்சனையும் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்