கூட்டணி வேண்டுமா? வேண்டாமா? காங்கிரஸ் கட்சிக்கு கெடு விதித்த ஒவைசி..!

Siva

ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (12:32 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் தங்கள் கட்சியை இணைப்பதா வேண்டாமா என்று இரண்டு நாட்களில் முடிவை தெரிவிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் தனித்து போட்டியிடுவோம் என்றும் ஒவைசி அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து ஒரு கூட்டணியை அமைத்துள்ள நிலையில் இந்த கூட்டணியில் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சி இணைய தயாராக இருப்பதாக அறிவித்தது.

ஆனால் இது குறித்து காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சி கூட்டணி எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஒவைசி, ‘மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி செய்யக்கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம், எனவேதான் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணியில் சில மாற்று கருத்துக்கள் இருந்தாலும் இணைய தயாராக இருப்பதாக அறிவித்தோம்.

ஆனால் இதுவரை எதிர்க்கட்சி கூட்டணி தங்கள் முடிவை தெரிவிக்கவில்லை. கூட்டணியில் இணைவதற்கு வெகு நாள் காத்திருந்த நிலையில் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே அந்த கூட்டணிக்கு கெடு விதிக்கிறோம், அதற்குள் முடிவை தெரிவிக்கவில்லை என்றால் தங்கள் கட்சி மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் தனித்து போட்டியிடும் என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்