யஷ்வந்த் சின்ஹாவுக்கு Z பிரிவு பாதுகாப்பு!!

வெள்ளி, 24 ஜூன் 2022 (11:02 IST)
பாஜகவுக்கு எதிராக குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த சின்ஹா Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.  

 
இந்தியாவின் குடியரசு தலைவராக தற்போது ராம்நாத் கோவிந்த் பதவி வகித்து வருகிறார். குடியரசு தலைவருக்கான பதவி காலம் 5 ஆண்டுகள் ஆகும். ராம்நாத் கோவிந்தின் குடியரசு தலைவர் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த குடியரசு தலைவருக்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 
சரத்பவார் தலைமையில் நடைபெற்ற 17 எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா ஒருமித்த கருத்தாக அறிவிக்கப்பட்டார். யஷ்வந்த் இதற்கு முன்னர் பாஜகவில் இருந்தவர் என்பதும் பாஜக ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆம், வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சர் பதவி வகித்த பாஜக பிரமுகரான யஷ்வந்த சின்ஹா கடந்த 2018 ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தார். தற்போது பாஜகவுக்கு எதிராக யஷ்வந்த சின்ஹா குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார்.
 
இந்நிலையில் இவருக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது மத்திய அரசு. இதனைத்தொடர்ந்து யஷ்வந்த் சின்ஹாவுக்கு துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு தர உள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்