டிராபிக்கில் சிக்கிய டெக் ஊழியர்.. பீட்சாவை நடுரோட்டில் காரில் டெலிவரி செய்த ஊழியர்..!

வியாழன், 28 செப்டம்பர் 2023 (17:59 IST)
பெங்களூரில் கடுமையான டிராபிக்கில் சிக்கிக்கொண்ட டேக் ஊழியர் ஒருவர் பீட்சா ஆர்டர் செய்த நிலையில் அவருக்கு நடுரோட்டில் காரிலேயே ஊழியர் பீட்சாவே டெலிவரி செய்தார். 
 
பெங்களூரில் இன்று கடும் ட்ராபிக் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சொந்த ஊர் செல்வதற்காக  டெக் ஊழியர் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் டிராபிக்கில் மணி கணக்கில் சிக்கிக்கொண்டிருந்த நிலையில் அவருக்கு பசி எடுத்தது. 
 
உடனே அவர் ஆன்லைன் மூலம் பீட்சா ஆர்டர் செய்து தான் இருக்கும் இடத்தையும் குறிப்பிட்டார். ஒரு சில நிமிடங்களில்  ஆன்லைன் உணவு நிறுவன ஊழியர் ட்ராபிக்கில் சிக்கி இருந்த அவருடைய லொகேஷனை கண்டுபிடித்து ஆர்டர் செய்த இடத்தில் பீட்சா டெலிவரி செய்தார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்