ஜூலை 1 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: மத்திய அரசு

திங்கள், 13 ஜூன் 2022 (15:45 IST)
ஜூலை 1 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: மத்திய அரசு
ஜூலை 1ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இதனால் மாஸா, ப்ரூட்டி உள்பட குளிர்பானங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் இனி ஸ்ட்ராவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
குளிர்பான நிறுவனங்கள் பிளாஸ்டிக் தடையை வரவேற்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் 6 முதல் 8 மாத கால அவகாசம் வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தன 
 
ஆனால் இந்த கோரிக்கையை தள்ளுபடி செய்த மத்திய அரசு ஜூலை 1ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்பதில் மட்டும் உறுதியாக உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இதனால் பேப்பரில் ஆன பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் குளிர்பான நிறுவனங்கள் உள்ளன என்பது குறிப்பித்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்