கர்நாடகா, குஜராத்தை அடுத்து மேலும் ஒரு மாநிலத்தில் ஒமிக்ரான் பாதிப்பு!

ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (07:43 IST)
ஏற்கனவே கர்நாடகம் மற்றும் குஜராத் ஆகிய இரண்டு மாநிலங்களில் ஒமிக்ரான் பரவியுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு மாநிலத்திலும் ஒமிக்ரான் பரவி இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கர்நாடகா குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமிக்ரான் தொற்று பரவி இருப்பதாகவும் இதனை அடுத்து அனைத்து மாநிலங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது
 
தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது என்னவெனில் அனைத்து விமான நிலையங்களிலும் வரும் வெளிநாட்டு பயணிகள் கண்டிப்பாக கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை செய்து தனிமைப்படுத்த அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது 
 
கர்நாடகா குஜராத் மாநிலங்களில் அடுத்து மகாராஷ்டிராவிலும் ஒமிக்ரான் பரவி இருந்தாலும் இதுவரை தமிழகத்தில் ஒமிக்ரான் பரவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்