ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் திடீரென மரணம் அடைந்திருப்பது மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் மிக அதிகமாக ஒமிக்ரான் வைரஸ் பரவி வருகிறது என்பதும் நேற்று ஒரே நாளில் 198 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸால்பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 52 வயது நபர் ஒருவர் திடீரென நேற்று உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது
ஒமிக்ரான் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நபர் கடந்த 13 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்ததாக அவர் ஒமிக்ரான் வைரஸால் உயிரிழக்கவில்லை என்றும் அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்