இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 3,623 ஆக உயர்வு!

ஞாயிறு, 9 ஜனவரி 2022 (11:46 IST)
இந்தியாவில் 27 மாநிலங்களில் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நிலையில், இதுவரையிலான மொத்த ஒமிக்ரான் பாதிப்புகள் 3,600 ஆக பதிவாகியுள்ளது. 

 
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் வேரியண்ட் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
 
இந்தியாவில் 27 மாநிலங்களில் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நிலையில், இதுவரையிலான பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,623 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 1,009 பேரும், டெல்லியில் 513 பேரும், கர்நாடகாவில் 441 பேரும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 185 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்