இதில், ஒரு லட்சம் தலைப்புகளின் கீழ் புத்தகங்கள் கிடைக்கும். மேலும், பழைய புத்தகங்கள் புதிய புத்தகங்கள் போலவே இதில் இருக்கும். புத்தகத்தின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை வாடிக்கையாளர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதில், 399 ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் வாங்கினால், இலவச புத்தகங்களும் வழங்கப்படும். புத்தகத்தை வாங்கிய பின், பணம் செலுத்தும் வசதியையும் இதில் இருக்கிறது.