விமானத்தில் இருந்து கீழே விழுந்த ஆயில் டேங்க்

செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (14:00 IST)
இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது, அதன் ஆயில் டேங்க் கீழே விழுந்தது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


 


 
விசாகப்பட்டிணத்தில் இந்திய கடற்படைக்கு சொந்தமான சூப்பர் சோனிக் மிக் 29 கே விமானத்தில் உள்ள 2 ஆயில் டேங்குகளை சரி பார்ப்பதற்காக விமானத்தை ஓட்டிச் சென்றனர்.
 
அப்போது அதில் ஒரு ஆயில் டேங்க் விமானத்தை விட அதிகமாக எடை இருந்ததால் அதை கடலில் விழ வைக்க முடிவு செய்தனர். ஆனால் திடீரென்று அந்த ஆயில் டேங்க் குடியிருப்பு பகுதியில் விழுந்தது. 
 
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதியில் இருந்த மக்களுக்கு முதலில் விழுந்தது என்னவென்று தெரியாமல் அச்சம் ஏற்பட்டது. பின்னர் அது விமானத்தின் ஆயில் டேங்க் என்று கண்டறிந்தனர்.
 
இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்