வெயில்ல முடியல.. விடியற்காலை 6 மணிக்கே பள்ளிகள் திறப்பு! – ஒடிசா அரசு அறிவிப்பு!

திங்கள், 2 மே 2022 (10:04 IST)
இந்தியா முழுவதும் கோடைக்காலம் காரணமாக வெயில் அதிகரித்துள்ள நிலையில் ஒடிசாவில் காலை 6 மணிக்கே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல மாநிலங்களில் வெயில் வாட்டி வருகிறது. நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றியமைக்க பல மாநில அரசுகள் ஆலோசித்து வருகின்றன.

ஒடிசாவில் வெயில் அதிகரித்து வருவதால் இன்று முதல் ஒடிசாவில் பள்ளிகள் காலை 6 மணிக்கே தொடங்கப்பட்டுள்ளது. 6 மணிக்கு தொடங்கி 9 மணிக்கெல்லாம் வகுப்புகளை முடித்துவிட அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்கள் வெயிலால் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்