கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரியா பிரகாஷ் வாரியார்!

செவ்வாய், 15 ஜூன் 2021 (15:34 IST)
மலையாள நடிகையான பிரியா பிரகாஷ் வாரியர் ஓமர் லுலு இயக்கி வெளிவந்த ஒரு அடார் லவ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் கண் அடிக்கும் காட்சி இந்திய அளவில் பெரும் பிரபலமாகியது. அதையடுத்து ஸ்ரீதேவியின் பயோபிக் படமான "பங்களா" என்றும் படத்தில் நடித்து வந்தார். ஆனால், படத்தை எடுக்க ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் நிறுத்திவிட்டார். 
 
இதையடுத்து சரியான வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்து வரும்  பிரியா பிரகாஷ் வாரியார் சமூகவலைத்தளங்களில் விதவிதமான புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது கொரோன தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு தன் ரசிகர்ளுக்கு அதன் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்