அவசர கால அனுமதி கோரும் நோவாவாக்ஸ் தடுப்பூசி

வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (14:39 IST)
நோவாவாக்ஸ், தங்களது தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி வழங்க வேண்டும் என இந்தியாவிடம் விண்ணப்பம்.

 
இந்தியாவின் சீரம் நிறுவனத்தில் தயாராக இருக்கும் இரண்டாவது தடுப்பூசியான நோவோவேக்ஸ் 90.4 சதவிகிதம் அளவுக்குப் பலனளிக்கும் என மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகளில் தெரிய வந்திருக்கிறது. கொரோனாவின் குறைந்த மற்றும் மிதமான பாதிப்புகளை 100 சதவிகிதம் அளவுக்கு தடுக்கும் என்றும் அந்த நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 
தற்போது நோவாவாக்ஸ் தடுப்பூசியின் பரிசோதனை நிறைவடையும் தருவாயில் இருப்பதால் , தடுப்பூசி தேவை அதிகமாக இருக்கும் நாடுகளுக்கு முதலில் வழங்குவதென அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளிடம் அவசர கால அனுமதி வழங்க வேண்டும் என விண்ணப்பம் செய்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்