பூஸ்டர் தடுப்பூசி போட தடை விதிக்க வேண்டும்! – உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்!

வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (08:19 IST)
கொரோனா மூன்றாம் அலை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை உலக நாடுகள் நிறுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

உலகம் முழுவதும் ஏற்கனவே கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தற்போது மூன்றாம் அலை பரவும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக நாடுகள் பலவற்றில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை தொடர்ந்து பூஸ்டராக மூன்றாம் டோஸ் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பரவல் உள்ள நிலையில் அனைத்து நாடுகளிலும் மக்கள் தொகையில் 10 சதவீதத்தினராவது தடுப்பூசி பெற்றாலே பரவலை கட்டுப்படுத்த முடியும் நிலை உள்ளது, ஆனால் பல நாடுகளில் மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியே கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர்களுக்கு தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்காமல் மற்ற நாடுகள் மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசிகள் எடுப்பது கொரோனாவை உலக அளவில் கட்டுப்படுத்த உதவாது என்ற வகையில் கருத்து தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்