ஆசிட் வீச்சு சம்பவம் தொடர்பாக Flibcard , Amazon நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

வியாழன், 15 டிசம்பர் 2022 (17:04 IST)
டெல்லியில் 17 வயது சிறுமியின் முகத்தில் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய  நிலையில், பிளிப்கார்டு மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மத்திய அரசு.

டெல்லி யூனியனில் உள்ள துவாரகா என்ற பகுதியில் இன்று காலை 9 மணிக்கு 17 வயது பள்ளி சிறுமி ஒருவர் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ஒரு சக்கரவாகனத்தில் வந்த 2 பேர் சிறுமியின் முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு வேகமாகச் சென்றுவிட்டனர்.

இதில், சிறுமியின் முகம், கண்கள்  பாதிக்கப்பட்டு, அவரது வலியால் துடித்துள்ளார், தற்போது ஆபத்தான  நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 ALSO READ: டெல்லியில் பள்ளி சிறுமி மீது ஆசிட் வீச்சு...

இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியானது. இந்த விவகாரத்தில் ,ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு சம்பவம் தொடர்பாக Flibcard மற்றும் Amazon ஆகிய நிறுவனங்கள் ஆன்லைனில் ஆசிட் விற்பனை செய்வது குறித்து, விளக்கம் அளிக்குமாறு மாநில மகளிர் ஆணையம்        நோட்டீஸ் அனுப்பியுள்ளது..

Edited By Sinoj
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்