பிரதமர் மோடியின் கடந்த ஐந்து ஆண்டுகளில் சாமியார்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்த நிலையில் அந்த பேச்சு மீண்டும் தொடர்கிறது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாபா ராம்தேவ், 'அடுத்த 50 வருடங்களில் இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடியாக மாறுவதை தடுக்க வேண்டும் என்றும், மக்கள் தொகை அதிகரிப்பால் அரசு அளிக்கும் சலுகைகளை முழுமையாக மக்களுக்கு கிடைக்காமல் இருப்பதாகவும், மக்கள் தொகையை தடுக்க மூன்றாவதாக பிறக்கும் குழந்தைக்கு ஓட்டுரிமை இல்லை என்ற சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும், இவ்வாறு சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே மக்கள் மூன்றாவது குழந்தைகளை பெற்றெடுக்கமாட்டார்கள் என்றும் இது அனைத்து மதத்தினர்களுக்குமான பொதுவான வேண்டுகோள் என்றும் பாபா ராம்தேவ் கூறியுள்ளார்