ரூ.2000 நோட்டு வாபஸ் ஆகுமா? அருண்ஜெட்லி அதிரடி பதில்

வெள்ளி, 17 மார்ச் 2017 (22:04 IST)
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. அதற்கு பதிலாக புதிய ரூ500 மற்றும் புதிய ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் வந்தது.



 




இந்நிலையில் விரைவில் புதிய ரூ.1000 நோட்டை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்யவுள்ளதாகவும், இந்த நோட்டு அறிமுகம் ஆனதும் ரூ.,2000 நோட்டு வாபஸ் பெறப்படும் என்றும் நாடு முழுவதும் வதந்திகள் பரவி வந்தன

இந்த நிலையில் இதுகுறித்து இன்று கருத்து தெரிவித்த மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, ' புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் திட்டம் இல்லை . நாட்டில் கறுப்புப்பணம் மற்றும் ஊழலை ஒழிக்கவே பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 10ஆம் தேதி வரை 12.44 லட்சம் கோடி பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் பெறப்பட்டுள்ளன

ஜனவரி 27ஆம் தேதி நிலவரப்படி, 9.921 லட்சம் கோடி ரூபாய் பொதுமக்களின் புழக்கத்தில் இருந்தது. மார்ச் 3ஆம் தேதி நிலவரப்படி இந்த அளவு 12 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது என்றும் அருண் ஜேட்லி சுட்டிக்காட்டினார்.

நிதியமைச்சரின் இந்த பேட்டியில் இருந்து இப்போதைக்கு ரூ.2000 நோட்டுக்கு ஆபத்து இல்லை என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது

வெப்துனியாவைப் படிக்கவும்