இந்த ஆண்டு மெடிக்கல் கல்லூரியில் சேர காத்திருக்கும் மாணவர்களுக்கு நீட் உண்டா? இல்லையா? என்ற குழப்பம் இன்னும் தீரவில்லை. இந்த வருடம் மட்டுமாவது விலக்கு அளித்தால் நல்லது என்று நீட்-ஐ விரும்பாத மாணவர்களும், நீட் இருந்தால் தான் தங்களுக்கு மெடிக்கல் சீட் கிடைக்கும் என்று நினைக்கும் மாணவர்களும் உள்ளனர். ஆனால் முடிவு யார் பக்கம் என்பது மதில்மேல் பூனையாக இருந்தது.
இந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என்று ஔறுதியுடன் கூறினாலும், இந்த ஒரு ஆண்டு மட்டும் தமிழக மாணவர்களுக்கு விலக்கு தர, தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என்றும் தெரிவித்தார்.