கர்நாடகாவில் உள்ள வங்கிகளில் அனைத்து மாநிலத்தை சேர்ந்தவர்களும் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த பலர் உள்ளனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் உள்ள வங்கிகளில் பணிபுரிபவர்கள் இன்னும் ஆறு மாதத்தில் கன்னட மொழியை கற்காவிட்டால் வேலையை விட்டு நீக்கப்படுவார்கள் என்ற அதிர்ச்சி தரும் அறிவிப்பு ஒன்று இன்று வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பால் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கன்னட மொழியை கற்க, வங்கியே பயிற்சி வகுப்பு நடத்துமா? அல்லது ஊழியர்கள் தாங்களாகவே கற்று கொள்ள வேண்டுமா? என்பது குறித்த தெளிவான அறிவிப்பு இல்லை
கர்நாடகத்தில் வாழும் பொதுமக்கள் குறிப்பாக கிராம மக்களுக்க்கு கன்னட மொழியை தவிர வேறு மொழி தெரியாது என்றும், அவர்களுக்கு சிறப்பான சேவை செய்ய வேண்டுமானால் ஊழியர்களுக்கு கன்னடம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்றும் சித்தராமையா கூறியுள்ளார். இந்த அறிவிப்பால் 60 நாட்களில் கன்னடம் கற்பது எப்படி என்ற புத்தகத்தை நோக்கி பலர் சென்று கொண்டிருப்பதாக தகவல்