ஜிஎஸ்டி சீரமைப்பால் பால் விலை குறையுமா? அமும் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

Siva

வியாழன், 11 செப்டம்பர் 2025 (12:36 IST)
ஜிஎஸ்டி 2.0 மறுசீரமைப்பு காரணமாக, பாக்கெட் செய்யப்பட்ட பால் விலை குறையும் என்று பரவிய வதந்திகளுக்கு, அமுல் நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய ஜிஎஸ்டி மாற்றங்களால் பாக்கெட் செய்யப்பட்ட பால் விலையில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று அமுல் நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து அமும் நிறுவனம் கூறியபோது, "பாக்கெட் செய்யப்பட்ட பால் விற்பனையில் ஏற்கெனவே பூஜ்ஜியம் சதவீத ஜிஎஸ்டி அமலில் உள்ளது. எனவே, புதிய ஜிஎஸ்டி மாற்றங்கள் பாக்கெட் பாலின் விலையை பாதிக்காது" என்று தெளிவுபடுத்தியுள்ளது.
 
இருப்பினும், புதிய ஜிஎஸ்டி கட்டமைப்புக்கு கீழ், நீண்ட ஆயுள் கொண்ட அல்ட்ரா-உயர் வெப்பநிலை பாலுக்கான ஜிஎஸ்டி விகிதம் 5 சதவீதத்தில் இருந்து பூஜ்யமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்த வகை பாலின் விலை மட்டும் குறைய வாய்ப்புள்ளது என்று அமும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்