முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார்.. கவர்னரை சந்தித்து கடிதம்..!

Mahendran

ஞாயிறு, 28 ஜனவரி 2024 (11:28 IST)
பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும் பீகார் ஆளுநர் ராஜேந்திரா அர்லேகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கியதாகவும் தகவல் வெளியானது. 
 
பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்த நிதீஷ் குமார் திடீரென கூட்டணி கட்சிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்பட்டது. 
 
அதன்படி இன்று சற்றுமுன் நிதீஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார். இதனை அடுத்து அவர் பாஜக ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது 
 
பாஜகவுடன் அவர் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளதை அடுத்து அவர் இந்தியா கூட்டணியில் இருந்து விலகிவிட்டார் என்று சொல்லலாம். ஏற்கனவே மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில் நிதிஷ்குமாரும் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி இருப்பது அந்த கூட்டணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்