பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி உள்ளது. மேலும் இந்தியா கூட்டணியிலும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளது. கடந்த சில மாதங்கள் வரை, இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஆவதற்கு வாய்ப்பிருக்கும் தலைவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்த நிதிஷ் குமார், ஒருங்கிணைப்பாளர் பதவி கிடைக்காத விரக்தியில் இருந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் பாட்னாவில் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இதேபோல் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.