இதையடுத்து, கடந்த 14 ஆம் தேதி மாலை செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன், முக்கியமான திட்டங்களை அறிவித்தார். இதற்குப் பல பாராட்டுகளும் விமர்சனங்களும் எழுந்து வரும் நிலையில் இன்று இரண்டாவது முறையாக நேற்று அவர் சில முக்கிய திட்டங்களை அவர் அறிவித்தார். இந்நிலையில், பிரதமர் மோடி அறிவித்த ரூ. 20 லட்சம் கோடி ரூபாயிலான் திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் சீதா ராமன் செய்தியாளர்களிடம் தெரிவித்து வருகிறார்.
அதில், வேளாண் துறை சார்ந்த 11 நிவாரண திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண்துறைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க 74,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பால் உற்பத்தியிலும் கரும்பு உற்பத்தியிலும், மீன் பிடித்தொழிலிலும் இந்தியா முன்னணி நாடாக உள்ளது. அதனால் 8 அறிவிப்புகள் வேளாண் உள்கட்டமைப்புக்கானதாகவும், நிர்வாக கட்டமைப்புகளுக்கு 3 திட்டங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.