பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வர தயார்: நிர்மலா சீதாராமன்

புதன், 15 பிப்ரவரி 2023 (22:00 IST)
மாநில அரசு ஒப்புக்கொண்டால் பெட்ரோலிய பொருள்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர தயார் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பெட்ரோல் பொருட்களை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வர வேண்டும் என்று அனைத்து தரப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர் என்றும் இதற்கு மாநில அரசுகள் ஒப்புக்கொண்டால் பெட்ரோலிய பொருள்களை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வர தயார் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் பொது மூலதன செலவுக்கு இந்த பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வர மாநில அரசுகளை அறிவுறுத்துகிறோம் என்றும் தெரிவித்துள்ளார். 
 
மேலும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தையும் அனைத்து மாநிலங்களையும் அமல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளோம் என்று தெரிவித்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்