சரியாக 9 மாதங்கள் விலை உயராத பெட்ரோல் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

புதன், 15 பிப்ரவரி 2023 (08:10 IST)
சரியாக 9 மாதங்கள் அதாவது 270 நாட்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது இந்தியாவில் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. 
 
உக்ரைரன் ரஷ்யா போர் காரணமாக உலகம் முழுவதும் கச்சா எண்ணையின் விலை ஏற்ற இறக்கத்துடன் உள்ளது என்பதும் இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் வங்கதேசம் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை உச்சத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் இந்தியாவில் கடந்த 9 மாதங்களாக ஒரே விலையில் பெட்ரோல் டீசல் விலை விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் சென்னையில்  இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 என்றும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 என்றும் விற்பனையாகி வருகிறது. சென்னை உள்பட இந்தியா முழுவதும் இன்னும் சில மாதங்களுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்