கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 3,66,161 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,26,62,575 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா அதிகரித்தல் காரணமாக நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு அமலபடுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சட்டீஸ்கரிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அங்கு மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனிடையே, கடந்த சில வாரங்களுக்கு முன் மதுபானம் கிடைக்காததால் ஆல்கஹால் கலந்து ஓமியோபதி சிரப் அருந்திய 9 பேர் மரணமடைந்தனர்.
இதனால், பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வீடுகளுக்கே சென்று மதுபானங்களை வழங்க சட்டீஸ்கர் அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை ஆன்லைனில் மதுபானங்களை ஆடர் செய்து வாங்கிக்கொள்ளலாம்.