திரிபுராவில் இரவு நேர ஊரடங்கு அமல்!!

வியாழன், 10 பிப்ரவரி 2022 (16:30 IST)
அதிகரிக்கும் கொரோனா பரவலால் திரிபுராவில் பிப்.11 முதல் 21 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தவுள்ளதாக அறிவிப்பு. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 67,084 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,24,78,060 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை முதல் வரும் 20 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக திரிபுரா அரசு அறிவித்துள்ளது. இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் உணவகங்கள், திரையரங்குகள், அழகு நிலையங்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு அரங்குகள், பொழுதுபோக்கு பூங்காவில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுமாம். 
 
அதோடு மூடப்பட்ட இடங்களில் நடைபெறும் எந்தவொரு நிகழ்விலும் 50 சதவீதம் திறன் கொண்ட மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்