உடல்உறுப்பு தானம் செய்த புதுமணத் தம்பதியர்..குவியும் பாராட்டுகள்

செவ்வாய், 27 டிசம்பர் 2022 (17:24 IST)
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு புது மணத் தம்பதியர்  உடல் உறுப்புகளைத்தானம் செய்துள்ளனர்.

இந்த உலகில் விபத்து, பிறவிக் குறைபாடுகள் உள்ளிட்ட காரணங்களால் பலரும்  பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களுக்கு உதவும் வகையில், உடல் உறுப்பு தானம் மூலம் சிகிச்சை பெறுவோரின் மறுவாழ்வுக்கு இது உதவுகிறது.

இந்த நிலையில், உடல் உறுப்பு தானம் பற்றி, மத்திய, மாநில அரசுகளும்  மருத்துவர்களும், திரை நட்சத்திரங்களும் மக்களிடம் விழிப்புணர்வூட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், ஆந்திராவில் சதீஸ்குமார்-சஜீவராணி ஜோடி தங்களின் உடல் உறுப்பு தானம் செய்வதாக உறுதியளித்துள்ளனர்..

இவர்களின் திருமணம் வரும் டிசம்பர் 29 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், மணமக்களின் உறவினர்கள் சுமார் 60 பேர் உடல் உறுப்பு தானத்திற்கு உறுதியளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited By Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்