இந்த நிலையில் இது குறித்து ஆய்வு செய்த புவியியல் வல்லுநர்கள் கூறியபோது சோன்பத்ரா மலைப்பகுதியில் 3000 டன் தங்கம் புதைந்து இருப்பதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை என்றும் அதிகபட்சம் அங்கு 160 கிலோ தங்கம் இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து புவியியல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் ஆய்வுக்குப் பின்னரே உண்மையில் எவ்வளவு தங்கம் அங்கே இருக்கிறது என்பதை உறுதி செய்ய முடியும் என்று கூறியுள்ளனர்.