கடந்த அக்டோபர் மாதம் நேபாளத்தின் பிரதமராக பதவியேற்றார் கே.பி.ஒளி. இந்நிலையில் கூட்டாட்சி நடைப்பெற்று வந்த அந்த நாட்டில் கே.பி. ஒளிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி கொள்வதாக நேபாளி காங்கிரஸ் மற்றும் சி.பி.என்.-மாவோயிஸ்ட் கட்சிகள் அறிவித்தன. கே.பி. ஒளி தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதாக அவை குற்றம்சாட்டின.