நம்ப வைத்து ஏமாற்றிய நிர்மாலா சீதாராமன்: துரைமுருகன் கொதிப்பு

சனி, 2 செப்டம்பர் 2017 (05:21 IST)
தமிழகத்திற்கு இந்த ஒரு ஆண்டு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் மத்திய அரசு உதவி செய்யும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் இதுகுறித்த வழக்கு வந்தபோது, தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசு சார்பில் வாதாடப்பட்டது



 
 
அப்படியானால் ஒரு மத்திய அமைச்சர் ஏன் வாக்குறுதி கொடுத்தார். தமிழக அரசிடம் ஒன்று கூறிவிட்டு சுப்ரீம் கோர்ட்டில் அதற்கு நேர்மாறாக கூறியது ஏன்? இதை ஏன் தமிழக அரசு தட்டி கேட்கவில்லை. இந்த கேள்வியை பலரும் கேட்டு வருகையில் திமுக மூத்த தலைவர் துரைமுருகன் அவர்களும் இதே கேள்வியை கேட்டுள்ளார். அவர் கூறியதாவது: 
 
மோடியின் குரலாக ஒலித்த அவர், நீட் தேர்விற்கு ஓராண்டு விலக்கு பெற்றுத் தரப்படும் என்று கூறினார். உடனடியாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மாணவி அனிதாவின் தற்கொலை மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது. அனிதாவின் பிரிவிற்கு மத்திய, மாநில அரசுகளே காரண. 
தமிழக மாணவர்களை கடைசி வரை குழப்பத்திலேயும், மன உளைச்சலிலும் மத்திய மாநில அரசுகள் வைத்திருந்தன' என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்