ரூ.141 கோடி ஊழல் புகார் எதிரொலி: தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ரமேஷ் கைது

செவ்வாய், 18 ஆகஸ்ட் 2015 (05:15 IST)
ரூ.141 கோடி ஊழல் புகாரின் பேரில், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரமேஷை, காவல்துறையினர் கைது செய்தனர்.
 

 
சோலாப்பூர் மாவட்டம், மோகோல் தொகுதி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ் கதம் எம்.எல்.ஏ.ஆவார்.
 
இவர், கடந்த காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சியின் போது, அன்னாபாவ் சாதே வளர்ச்சி கழகத்தின் தலைவராக இருந்தார். அப்போது சுமார் ரூ.141 கோடிக்கும் மேல் முறைகேடுகள் நடைபெற்றதாக சமூக ஆர்வலர் ஒருவர்  காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 
அந்தப் புகாரின் பேரில் எம்.எல்.ஏ. ரமேஷ் கதம் உள்ளிட்ட பலர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
 
இந்த நிலையில், மோகோல் தொகுதி சட்டமன்ற தொகுதி, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ் கதம் எம்.எல்.ஏ. உள்ளிட்ட மூன்று பேரை சிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.
 
மேலும், இந்த வழக்கில், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்