சத்தீஸ்கரில் நக்சலைட்களுடன் துப்பாக்கி சண்டை: இந்திய வீரர்கள் பலி

சனி, 12 மார்ச் 2016 (15:50 IST)
சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் மாவட்டத்தில் நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இரண்டு பேர் மரணமடைந்தனர்.


 
 
கான்கெர் மாவட்டத்தில் சோட்டா பேத்தியா-பகஞ்சோர் வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு தேடுதல் வேட்டை நடத்தினர். அந்த வனப்பகுதியில் இரண்டு பட்டாலியன் வீரர்கள் இன்று அதிகாலை 2.30 மணியளவில் முன்னேறி சென்றனர்.
 
அப்போது காட்டின் வேறொரு பகுதி வழியாக பாதுகாப்பு படை வீரர்களை சுற்றி வழைத்த நக்சலைட்டுகள் அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு பாதுகாப்புபடை வீரர்கள் பலியாகினர் சிலர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
 
அந்த பகுதியில் தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்