மருத்துவ கல்வியை முடித்த எம்பிபிஎஸ் மாணவர்கள் உடனே டாக்டராக முடியாத வகையில் அவர்கள் டாக்டராக தொழில் புரிய தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற புதிய மசோதா, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் மருத்துவம் பயின்று வரும் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்
மருத்துவ கல்வி குறித்த புகார்கள் அதிகம் வருவதால் மருத்துவ கல்வியை சீர்திருத்தவே இந்த புதிய மசோதா என்றும், மருத்துவ கல்வியை முடித்தவர்கள் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே டாக்டராக தொழில் புரிவதற்கான உரிமம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.