இந்த நிலையில், விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து கும்பமேளா பகுதியை புகைப்படம் எடுத்து, நாசா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பதிவில், "2025 ஆம் ஆண்டு மகா கும்பமேளா நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த புகைப்படம் இரவில் விண்வெளி மையத்திலிருந்து எடுத்தது. உலக அளவில் மனிதர்கள் கூடும், இந்த விழாவை முன்னிட்டு இரவு நேரத்தில் அந்த நகரமே ஒளிர்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.