இதில் குஜராத் கலவரம், ஆர்எஸ்எஸ் பயிற்சி, மோடிக்கு எதிரான பாகிஸ்தானின் சதி உள்பட பல விஷயங்களை காட்டி இருக்கிறார்கள். பிரதமர் மோடியாக விவேக் ஆனந்த் ஓப்ராய் நடித்துள்ளார். ஓமங் குமார் இயக்கி உள்ளார். லெஜண்ட் குளோபல் ஸ்டுடியோ மற்றும் ஆனந்த் பண்ட் மோசன் பிக்சர்ஸ் சார்பில் சுரேஷ் ஓப்ராய், சந்தீப் சிங், தயாரித்துள்ளனர். வரும் ஏப்ரல் 5ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இப்படம் வெளியாகிறது.