'எனது மகன் நாட்டை வளர்ச்சியை நோக்கி வழிநடத்துவார்' - மோடியின் தாய்
வெள்ளி, 16 மே 2014 (12:09 IST)
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றதால் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகிறார். இது குறித்து பெருமிதம் தெரிவித்த மோடியின் தாய் ஹிரபா மோடி, அவரது மகன் நாட்டை வளர்ச்சியை நோக்கி வழிநடத்தி செல்வாரென தெரிவித்துள்ளார்.
நாடெங்கும் ஒன்பது கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. வாக்கு எண்ணிக்கையில் நாடு முழுவதும் பாஜக அதன் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 333 இடங்களை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நரேந்திர மோடி போட்டியிட்ட வதோதரா தொகுதியில் அவர் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவர் ஆம் ஆத்மி கட்சி தலைவரான் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் போட்டியிட்ட வாரணாசி தொகுதியிலும் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தெரிகிறது.
இதையடுத்து மோடியின் வெற்றி குறித்து பெருமிதம் தெரிவித்த மோடியின் தாய் ஹிரபா மோடி, அவரது மகன் நாட்டை வளர்ச்சியை நோக்கி வழிநடத்தி செல்வாரென தெரிவித்துள்ளார்.